ராசாத்தி மனசில........அந்த ராசாவின் நினப்பு தான்.................
"டெல்லிப் பக்கம் போயிருந்தேன்பா. அதான் கூட்டம் நடத்த தாமதமாயிடுச்சு" என்று விளக்கம் கொடுத்த சித்தன் "கச்சேரியை ஆரம்பிச்சுடலாமா" என்றார்.
''என்னத்தை ஆரம்பிக்கறது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டின்னு சொல்வாங்க. அந்த மாதிரி நம்ப கலைஞர் செய்துட்டதா சி.ஐ.டி காலனி வீட்டம்மா புலம்புறாய்ங்களாம். இந்த சுப்ரமணியசுவாமி பண்ற அலம்பலை எப்படியாவது கட்டுப்படுத்தலாம்னு மகள் கனி படாதபாடு பட்டது யாருக்காவது தெரியுமா? அந்த 'சாமிய' ஸ்பெக்ட்ரம் விஷயத்துல ஓவரா சாமியாடதேன்னு டெல்லியில ஒரு தடவ பார்த்து பேசுச்சு. பிறவு ஒரு தடவை சென்னை ஏர்போர்ட்டிலேயே வச்சு சந்திச்சு கேட்டுக்கிடுச்சு. அப்பால ஒரு தடவ சாந்தோம்ல இருக்கிற சுவாமியின் வீட்டுக்கே போய் சமாதானப்படுத்துச்சு.அந்த ஆளும் பார்க்கலாம்னு சொல்லியனுப்பினாரு.அதுக்குள்ளாகவே யார் ஆலோசனை சொல்லி-கொடுத்தாங்களோன்னு தெரியல.நீதிமன்றத்துல 'இந்த வழக்குல கருணாநிதியையும் சேர்த்து விசாரிக்கணும்னு' அந்தாளு சொன்னதுக்கு இவரு வக்கீல் நோட்டீஸ் அனுப்புறதா பெரீசா செய்திய வெளியிட்டாரு. இப்ப என்னாச்சு பாருங்க.சாமி ரொம்பவே ஆட ஆரம்பிச்சுடுச்சு. கவர்னரை சந்திச்சு முதல்வர் பேர்ல
வழக்கு போட அனுமதி வேண்டும்னு மனு கொடுத்திருக்காரு.இதெல்லாம் தேவையான்னு ஒரு 'கச்சேரி வக்கிறாய்ங்களாம்.''என்று பிள்ளையார் சுழி போட்டார் கோட்டை கோபாலு.
வழக்கு போட அனுமதி வேண்டும்னு மனு கொடுத்திருக்காரு.இதெல்லாம் தேவையான்னு ஒரு 'கச்சேரி வக்கிறாய்ங்களாம்.''என்று பிள்ளையார் சுழி போட்டார் கோட்டை கோபாலு."ஏம்பா. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துல 'வீட்டு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருக்கு'ன்னா அதுக்கு முதல்வர் என்ன செய்வாரு? அந்த துறை அமைச்சர்தானே பொறுப்பு"என்று வெள்ளந்தியாக கேட்டார் அன்வர்.
''அடக்கடவுளே. வீடு ஒதுக்கீடு பெற்றதுல பலனடைந்தவங்க யாரு? பட்டியலை எடுத்து பாருங்க. எல்லா ஆளுங்களும் முதல்வருக்கு ரொம்ப நெருக்கமா இருக்கிறவங்க. நிலைமை என்னாகும் தெரியுமா. முதல்வர் தலையிட்டு அதிகாரத்தை தவறா பயன்படுத்தி தகுதி இல்லாதவங்களுக்கு கொடுத்திருக்காய்ங்கன்னு வழக்கு போகும்.கவர்னர் முன்னாடி பதவி ஏத்துக்கறப்போ என்ன சொல்லி பதவியேற்கிறாங்க.!
அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டேன்னுதானே.அந்த வகையில சுப்ரமணிய-சுவாமிகிட்ட நம்ப முதல்வரு நல்ல மாட்டிகிட்டாருன்னுதான் சொல்றாங்க.தலைவலி கூடவே இப்போ திருகுவலியும் சேர்ந்தில்ல குடையப் போகுது. இதோட நிக்கப்போறதில்லையாம். இன்னும் இருபது வழக்கு இப்படி போடப்போகிறாராம் சுவாமி.''என்று நிலவரத்தை கலவரமாக்கினாரு சித்தன்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டேன்னுதானே.அந்த வகையில சுப்ரமணிய-சுவாமிகிட்ட நம்ப முதல்வரு நல்ல மாட்டிகிட்டாருன்னுதான் சொல்றாங்க.தலைவலி கூடவே இப்போ திருகுவலியும் சேர்ந்தில்ல குடையப் போகுது. இதோட நிக்கப்போறதில்லையாம். இன்னும் இருபது வழக்கு இப்படி போடப்போகிறாராம் சுவாமி.''என்று நிலவரத்தை கலவரமாக்கினாரு சித்தன்."சரிப்பா... முதல்வர் டெல்லி போனாரே. அங்க என்னதான் நடந்ததாம். ஒரு தகவலும் முழுசா தெரியமாட்டேங்கிறதே..." அலுத்துகொண்டார் சுவருமுட்டி சுந்தரம்.
''அதுக்கு முன்னாடி ஒரு சந்திப்பு நடந்தது. அதை கேட்டா மற்ற விபரம் எல்லாம் தானாவே புரியும்.அவசரமா வரச்சொல்லி ரெண்டு பேரு டெல்லிக்கு போனாங்க. தென்தமிழ் நாட்டில் பலமா இருக்கிற மாமனும், ஊடக பலத்தை கையில் வச்சிருக்கிற இளைய மச்சானும்தானாம் அது. காங்கிரஸ் கட்சியோட மூத்த தலைவரு அகமது பட்டேல்தான் அங்க சந்திச்சு பேசினாரு. நீதிபதி சிவராஜ் பட்டீல் கமிஷன் ரிப்போர்ட், ராசா நிறைய முறைகேடு செய்திருக்கிறதா சொல்லுது. ஊழல் நடந்திருக்கிறது உண்மைதான்.நமக்கே தெரியாம நிறைய விஷயம் நடந்திருக்கு. சோனியா மேடம் ரொம்ப கவலையா இருக்காங்க. 'அப்பா.. அப்பான்னு நம்பியிருந்தேன்.கடைசியில
இப்படி செய்துட்டாரு'ன்னு ரொம்பவும் கவலைப்படுறாங்க மேடம். வேற வழியே இல்ல. ராசா கைது நடக்கும். தொடர்ந்து 'பலரையும்' வளைச்சு விசாரிக்க வேண்டியிருக்கும். அப்படி செய்யுறப்போ முதல்வர், ராசாவை விட்டுகொடுக்க மாட்டார். மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிட்டா என்ன செய்யறது? நீங்களே சொல்லுங்கன்னு கேட்டிருக்காரு.அதுக்கு அந்த ரெண்டு பேரும் 'கவலையே வேண்டாம். இப்போ எங்க பக்கம் எட்டு எம்பிக்கள் இருக்கிறார்கள். இன்னும் ரெண்டு பேரை இழுக்க முடியும். அதில் ஒருத்தரு புதுசா மந்திரி பதவி எதிர்பார்க்கிறாரு. அப்படியே தேவகவுடாகிட்ட பேசி அந்த கட்சி எம்.பி.ங்க ஆதரவையும் வாங்கிடலாம்.காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு சிக்கலும் வராதுன்னு உத்திரவாதம் கொடுத்திட்டு திரும்பியிருக்காங்க. அகமது பட்டேல் அந்த தகவலை அப்படியே சோனியாகிட்ட சொல்லியிருக்காரு.'' என்று சித்தன் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட சுவருமுட்டி..
இப்படி செய்துட்டாரு'ன்னு ரொம்பவும் கவலைப்படுறாங்க மேடம். வேற வழியே இல்ல. ராசா கைது நடக்கும். தொடர்ந்து 'பலரையும்' வளைச்சு விசாரிக்க வேண்டியிருக்கும். அப்படி செய்யுறப்போ முதல்வர், ராசாவை விட்டுகொடுக்க மாட்டார். மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிட்டா என்ன செய்யறது? நீங்களே சொல்லுங்கன்னு கேட்டிருக்காரு.அதுக்கு அந்த ரெண்டு பேரும் 'கவலையே வேண்டாம். இப்போ எங்க பக்கம் எட்டு எம்பிக்கள் இருக்கிறார்கள். இன்னும் ரெண்டு பேரை இழுக்க முடியும். அதில் ஒருத்தரு புதுசா மந்திரி பதவி எதிர்பார்க்கிறாரு. அப்படியே தேவகவுடாகிட்ட பேசி அந்த கட்சி எம்.பி.ங்க ஆதரவையும் வாங்கிடலாம்.காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு சிக்கலும் வராதுன்னு உத்திரவாதம் கொடுத்திட்டு திரும்பியிருக்காங்க. அகமது பட்டேல் அந்த தகவலை அப்படியே சோனியாகிட்ட சொல்லியிருக்காரு.'' என்று சித்தன் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட சுவருமுட்டி..''ஏலேய் சித்தா. ஞாபகம் இருக்கா. நம்ப அலப்பரை கூட்டத்திலேயே திமுக உடையும். அந்த வேலைய காங்கிரஸ் கட்சியே செய்யும். திமுக-விலேயே சிலர் அதுக்கு தயாரா இருக்காங்கன்னு பலமுறை பேசியிருக்கோம். நிலைமை எப்படி போகுது பார்த்தியா'' என்று கைகொட்டி சிரித்தார்..

''ரொம்பவும் சிரிக்காதேப்பா. 'அந்த சந்திப்பு' பற்றி நம்ப முதல்வருக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சாம். அதானலதான் அவர் டெல்லிக்கு போனப்போ பொங்கி எழாம அடக்கி வாசிச்சிருக்காரு. அது மட்டுமல்ல. எற்கனேவே அகமது பட்டேல் சொன்ன மாதிரி கலைஞர் சோனியாவை சந்திக்க அவ்வளவு லேசில் ஒப்புக்கொள்ளவில்லையாம். விக்கிரமாதித்தன் மாதிரி கலைஞர் விடாம முயற்சி எடுத்தார். பிறகுதான் ஒரு வழியா சம்மதம் கிடைச்சிருக்கு.அந்த சந்திப்புக்கு போகும்போதே 'ராசா சி.பி.ஐ. கஸ்டடியில் வைத்து ஒன்பது மணி நேரம் விசாரிக்கப்பட்டார்ங்கிற' செய்தி மீடியாவுல பரபரப்பானது. காலையில இருந்து வெளிவராத அந்த செய்தி சோனியாவை சந்திக்க போகும் போது ஏன் மீடியா வெளிப்படுத்தணும்னு ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம் முதல்வர். அந்த துயரத்தோடவே சோனியாவின் பங்களாவுக்குள் நுழைந்தவருக்கு மற்றொரு அதிர்ச்சி. தமிழக அரசின் செய்தித்துறை மீடியா, கலைஞர் டி.வின்னு எதற்கும் உள்ளே அனுமதி இல்லைன்னு சொல்லிட்டாய்ங்க. சோனியாவை சந்திச்சு 'எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லேன்னு படம் போட்டு காட்ட நினைச்சதும் நடக்கல. அப்படி ஒரு படம் வர்றதை சோனியா விரும்பல.வர்ற பத்தாம் தேதி ஸ்பெக்ட்ரம் விவகாரம் சம்பந்தமா சி.பி.ஐ.நீதிமன்றத்துல அறிக்கை கொடுக்க இருக்கிற நேரத்தில இப்படி ஒரு படம் தேவையில்லாத சிக்கலை உருவாக்கும்னு சோனியா நினைச்சாங்களாம்.பிறவு நடந்த சந்திப்பும் சும்மா ஒரு மூன்று நிமிடம்தானாம்.அந்த நேரத்தில் உடனிருந்த மகள் கனிமொழியையும்,தள்ளுவண்டியை தள்ளிகிட்டு போன நபரையும் வெளியில போக சொல்லிட்டுதான் பேசியிருக்காங்க.''- சித்தன்.
"மகள் சோனியா அப்பா கலைஞருக்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா.அடக்கடவுளே"- சுவருமுட்டி
''என்ன செய்யிறது. நிலைமை அப்படியாகியிருக்கு. சோனியாவோட ரெண்டு சகோதரிங்க இருக்கிறாங்க இல்லையா!
அந்த ரெண்டு பேரு பேர்லயும் தலா பதினெட்டு ஆயிரம் கோடிய வெளிநாட்டில் உள்ள ஒரு வங்கியில போட்டிருக்காங்க.அந்த ரெண்டு பேரோட பத்து விரல் ரேகையும் பதிஞ்சுதான் வங்கி கணக்கை தொடங்கியிருக்காங்க. அந்த சகோதரிங்க சோனியாகிட்ட பேசறதுக்குகூட நேரம் கொடுக்காம அமெரிக்காவுல இருக்கிற ஒரு தீவுக்கு அழைச்சுட்டுப் போய் வங்கிக் கணக்கை எல்லாம் தொடங்க பணத்தை போட்ட பிறகுதான் அக்கா சோனியாகிட்ட பேச வாய்ப்பை ஏற்படுத்தியிருக்காங்க. அநத் அளவுக்கு ராசாவோட நெட்ஒர்க் வேலை செய்திருக்கு. அதுவெல்லாம் கலைஞருக்கு தெரியாம நடந்திருக்காதுன்னு சோனியாவோட வேதனை. அதனால்தான் சரியா முகம் கொடுத்து பேசலையாம்.அதன் பிறகு முதல்வர் வேற அறையில இருந்த அகமது பட்டேல்,ராகுல்காந்தி ஆகியோர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிவிட்டு வெளியே வந்து 'ஏதோ சோனியா அம்மையார்கிட்ட தான் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினதா' காட்டினாரு. அப்படியும் எந்த முடிவும் உறுதியா எடுக்கல.பிப்ரவரி பத்தாம் தேதிக்குப் பிறகுதான்னு சொன்னதோட ரெண்டு தரப்புலேயும் ஒரு கமிட்டி போட்டு பேசுவோம்னு சொல்லிட்டாங்க. இதுக்கு முந்தின காலகட்டத்தில் இப்படி நடந்ததில்ல.''- சித்தன்.
அந்த ரெண்டு பேரு பேர்லயும் தலா பதினெட்டு ஆயிரம் கோடிய வெளிநாட்டில் உள்ள ஒரு வங்கியில போட்டிருக்காங்க.அந்த ரெண்டு பேரோட பத்து விரல் ரேகையும் பதிஞ்சுதான் வங்கி கணக்கை தொடங்கியிருக்காங்க. அந்த சகோதரிங்க சோனியாகிட்ட பேசறதுக்குகூட நேரம் கொடுக்காம அமெரிக்காவுல இருக்கிற ஒரு தீவுக்கு அழைச்சுட்டுப் போய் வங்கிக் கணக்கை எல்லாம் தொடங்க பணத்தை போட்ட பிறகுதான் அக்கா சோனியாகிட்ட பேச வாய்ப்பை ஏற்படுத்தியிருக்காங்க. அநத் அளவுக்கு ராசாவோட நெட்ஒர்க் வேலை செய்திருக்கு. அதுவெல்லாம் கலைஞருக்கு தெரியாம நடந்திருக்காதுன்னு சோனியாவோட வேதனை. அதனால்தான் சரியா முகம் கொடுத்து பேசலையாம்.அதன் பிறகு முதல்வர் வேற அறையில இருந்த அகமது பட்டேல்,ராகுல்காந்தி ஆகியோர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிவிட்டு வெளியே வந்து 'ஏதோ சோனியா அம்மையார்கிட்ட தான் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினதா' காட்டினாரு. அப்படியும் எந்த முடிவும் உறுதியா எடுக்கல.பிப்ரவரி பத்தாம் தேதிக்குப் பிறகுதான்னு சொன்னதோட ரெண்டு தரப்புலேயும் ஒரு கமிட்டி போட்டு பேசுவோம்னு சொல்லிட்டாங்க. இதுக்கு முந்தின காலகட்டத்தில் இப்படி நடந்ததில்ல.''- சித்தன்."அதற்கு பிறகு ஆ.ராசா கைதானத வச்சு 'கலவரமான நிலவரத்தை' தலைவர் புரிஞ்சுகிட்டிருப்பாரு.இப்ப ராசாவை எப்படி வெளியில எடுக்கணும்தான் ரொம்ப கவலையா இருக்காராம் இல்ல" - கோபாலு
''பின்ன? ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடின்னா சும்மாவா!. ராசா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துகிட்டிருக்காருன்னு சி.பி.ஐ சொல்லுது. அதைவச்சு பார்த்தா அவருக்கு பெயில் கிடைக்கிறதுல பெரிய சிக்கல் இருக்கலாம். அது மட்டுமல்ல. ஒரு அறுபதாயிரம் கோடி வெளிநாட்டுல முடங்கியிருக்கு. பணமாகவும், தொழில் நிறுவனமாகவும் இருக்கு. அதைப்பற்றி ராசா வாய் திறக்க மாட்டேங்கிறார். ஆனால் அவரோட பினாமி சாதிக் பாட்சா, அண்ணன் கலியபெருமாள் மூலமா வேண்டிய தகவலை சி.பி.ஐ வாங்கியிருக்கு. அதிகாரிங்களும் போட்டுக் கொடுத்திருக்காங்க. ஆனால் ராசா மட்டும் பிடிகொடுக்காதது சி.பி.ஐ-க்கு ஒரு கௌரவ பிரச்சனையா இருக்காம்.அதனால தாளிக்காம விடமாங்கன்னு டெல்லி வட்டாரம் சொல்லுது.'' என்ற சித்தன், "சரிப்பா... நம்ப கட்சிங்களோட கூட்டணி நிலவரம் எப்படியிருக்கு?" என்றார்.
''அதையேன் கேட்குறே. குவாட்டர் அடிக்குற எனக்கே தலைசுத்தி போகுது. என்ன நடக்குதுன்னே தெரியல. நம்ப விஜயகாந்த் அவரோட கேப்டன் டி.வியில போட்டு தாக்குறத பார்த்தா திமுக கூட்டணிய கனவுல கூட நினைக்க மாட்டாருன்னு தோணுது.அதுக்கேற்ற மாதிரி அம்மாவோட அதிமுக-வோட பேசி முடிச்சட்டாரு. தொகுதி பங்கீடு பற்றி பேசுறதுக்காக இதோ இப்போ போறாரு.அப்போ போறாருன்னு நேரம்
குறிச்சுக்கிட்டேயிருக்காங்க.போயஸ் கார்டன் திறந்தபடியே இருக்கு. கேப்டன் இன்னும் போன-பாடில்லை.என்ன சேதின்னு விசாரிச்சா டெல்லி காங்கிரஸ் தனியா கொக்கி போடுதாம்.கொஞ்சம் பொறுங்க கேப்டன். திமுக-காங்கிரஸ் கூட்டணிங்கிறது இன்னும் உறுதியா முடிவாகல. ஒரு வேளை கூட்டணி புட்டுகிட்டு போகவும் வாய்ப்பிருக்கு. அப்படியானால் கேப்டனை கூட வச்சுகிட்டு தேர்தலை சந்திக்க வாய்ப்பா இருக்கும்னு சொல்றாங்க.அது எந்த அளவுக்கு எடுபடும்னு தெரியல.குட்டை குழம்பிதான் இருக்கு. தெளியறதுக்கு இன்னும் பத்து நாள் ஆகலாம்னு அரசியல் சோதிடம் சொல்லுது'' என்றார் கோபாலு.
குறிச்சுக்கிட்டேயிருக்காங்க.போயஸ் கார்டன் திறந்தபடியே இருக்கு. கேப்டன் இன்னும் போன-பாடில்லை.என்ன சேதின்னு விசாரிச்சா டெல்லி காங்கிரஸ் தனியா கொக்கி போடுதாம்.கொஞ்சம் பொறுங்க கேப்டன். திமுக-காங்கிரஸ் கூட்டணிங்கிறது இன்னும் உறுதியா முடிவாகல. ஒரு வேளை கூட்டணி புட்டுகிட்டு போகவும் வாய்ப்பிருக்கு. அப்படியானால் கேப்டனை கூட வச்சுகிட்டு தேர்தலை சந்திக்க வாய்ப்பா இருக்கும்னு சொல்றாங்க.அது எந்த அளவுக்கு எடுபடும்னு தெரியல.குட்டை குழம்பிதான் இருக்கு. தெளியறதுக்கு இன்னும் பத்து நாள் ஆகலாம்னு அரசியல் சோதிடம் சொல்லுது'' என்றார் கோபாலு.சுவருமுட்டி சுந்தரத்தால் ரொம்ப நேரம் அமைதியா இருக்க முடியல. ''ஏலேய் என்னலே சும்மா வழவழன்னு பேசிகிட்டு! ஏதாவது ஒரு சேதிய பட்டுன்னு போட்டு உடைக்கிறீங்களா.நான் ஒரு தகவலை எப்படி உடைக்கிறேன் பாரு. உளவுத் துறையில இருக்கிற அந்த முக்கியமான அதிகாரி கூடிய சீக்கிரம் பதவிய ராஜினாமா செய்ய இருக்காரு. தளபதிக்கு முக்கியத் துணையா, நம்பிக்கையா யாரும் இல்லையாம். உடன் பிறந்ததுங்களே 'திண்ணை எப்ப காலியாகும்னு' துடிக்குதுங்க. அதனால பதவிய தூக்கி எறிஞ்சுட்டு தளபதிக்கு பக்கபலமா இருக்கச் சொல்லி 'பெரியவரு' சொல்லிட்டாரு. பிறகு எப்படியாவது ஒரு ராஜ்யசபா பதவிய கொடுத்துட வேண்டியது.அவரோட உளவு அனுபவத்தை கட்சிக்கும், தளபதிக்கும் பயன்படுத்துறதுதான் திட்டமாம். டெல்லி அரசியலையும் தமிழ்நாட்டு அரசியலையும் பார்த்துகிறதுக்காகத்தான் உளவுப் பதவிய ராஜினாமா செய்ய போகிறாராம். அப்புறம் இன்னொரு மேட்டர்.கைது சம்பவத்தால காலனி வீடு ரொம்பவும் உடைந்து போயிருக்காம். போலீஸ் நம்ப வீட்டுக்கு எப்போ வரப் போகுதோங்கிற கவலை ஆட்டிப் படைக்குதாம்.இதுக்கிடையில வெளிநாட்டு முதலீட்டையெல்லாம் ஏதோ ஒரு குரூப் போய் விலாவாரியா விசாரிச்சுகிட்டு இருக்காம். அது 'சகோதரர்கள்' சம்பந்தமான குரூப்பா இருக்குமோன்னு கலங்கிப் போய் இருக்காங்களாம்"என பகீர் தகவல்களை போட்டு உடைத்தார்.
"அது எப்படிப்பா. நோட்டீஸ் கொடுத்து விசாரிக்காம கொள்ளாம எப்படி திடீர்னு வந்து வீட்டுக்கு முன்னாடி சி.பி.ஐ.நிப்பாங்க.இது என்ன 500 ரூபாய் பிக்பாக்கெட் அடிச்ச விவகாரமா என்ன?1.76ஆயிரம் கோடியாச்சே" வெள்ளந்தியாக கேட்டார் சித்தன்.
''அந்த சம்பிரதாயம் எல்லாம் ரகசியமாகவே முடிஞ்சுடுச்சுப்பா. நமக்குதான் தகவல் தெரியல. பத்தாம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு மொத்த விசாரணை பற்றிய
அறிக்கைய கொடுக்கணும். அந்த ரெண்டு பேர்கிட்ட மட்டும் விசாரிக்காம போனா அதுவே பெரிய சிக்கலாயிடும். பிரதமரைதான் கேள்வி கேட்பாங்க.நம்ப சிங் என்ன அவ்வளவு லேசுப்பட்டவரா!நமக்கெதுக்கு வம்புன்னு சி.பி.ஐ.யை பாயச் சொல்லிட்டாரு. அதன் பிறகு டெல்லி அதிகாரிகிட்டயிருந்து உரியவருக்கு 'இப்படி ஒரு சிக்கல் வந்துடக்கூடாது. விசாரிச்சே ஆகணும். ஒத்துழைப்பு வேண்டும். தகவல் பெரிய செய்தியாவதை நாங்களும் விரும்பவில்லை' தான்னு சொல்லியிருக்காங்க.அதன் பிறகு ஒரு நாள் பெரியவர் தன்னோட இருந்த படைகளை எல்லாம் வேறு வேலைகள் பக்கம் திசை திருப்பிவிட்டு காலனி வீட்டுக்கு சென்றார்.சொன்னபடியே ஐந்து அதிகாரிகள் ஆடம்பரம் இல்லாமல் வந்திருந்தார்கள்.அனைவரும் பெங்களூர் அதிகாரிகள். சாட்சி கையெழுத்து போட மட்டும் ஒரே ஒரு தமிழ் அதிகாரி.அவரும் ரகசியமாகவே வரவழைக்கப்பட்டாராம்.மொத்தம் நூறு கேள்விகள் கேட்கப்பட்டதாம். அம்மாவிடம் இருந்து மூன்றுக்குதான் பதில். மகளிடம் இருந்து எழுபது கேள்விகளுக்கு பதில்.விபரமா எழுதி சீல் போட்டு எடுத்துகிட்டு போய் ரொம்ப நாள் ஆச்சு.அடுத்தக்கட்ட ஆக்ஷனுக்குதான் காத்துகிட்டு இருக்கு.ஒரு விஷயம் மட்டும் நல்லா கேட்டுக்கோங்க.
'போகுது... ஈழத் தமிழர்களின் உயிர் போகுது, காப்பாத்துங்கன்னு சனங்க கத்தினது அப்போ பெரியவரு காதுல விழல.இப்போ அவர் கத்துறது டெல்லி காதுல விழல.டெல்லி அம்மா அழற சத்தம் பி.ஜே.பி-கம்யூனிட்டுங்க காதுல விழமாட்டேங்கிறது.இதான் வரலாறு திரும்புதுன்னு சொல்வாங்க போல'' என்று அர்த்த புஷ்டியோடு சிரித்தார் சுவருமுட்டி சுந்தரம். சபை கலைந்தது.
அறிக்கைய கொடுக்கணும். அந்த ரெண்டு பேர்கிட்ட மட்டும் விசாரிக்காம போனா அதுவே பெரிய சிக்கலாயிடும். பிரதமரைதான் கேள்வி கேட்பாங்க.நம்ப சிங் என்ன அவ்வளவு லேசுப்பட்டவரா!நமக்கெதுக்கு வம்புன்னு சி.பி.ஐ.யை பாயச் சொல்லிட்டாரு. அதன் பிறகு டெல்லி அதிகாரிகிட்டயிருந்து உரியவருக்கு 'இப்படி ஒரு சிக்கல் வந்துடக்கூடாது. விசாரிச்சே ஆகணும். ஒத்துழைப்பு வேண்டும். தகவல் பெரிய செய்தியாவதை நாங்களும் விரும்பவில்லை' தான்னு சொல்லியிருக்காங்க.அதன் பிறகு ஒரு நாள் பெரியவர் தன்னோட இருந்த படைகளை எல்லாம் வேறு வேலைகள் பக்கம் திசை திருப்பிவிட்டு காலனி வீட்டுக்கு சென்றார்.சொன்னபடியே ஐந்து அதிகாரிகள் ஆடம்பரம் இல்லாமல் வந்திருந்தார்கள்.அனைவரும் பெங்களூர் அதிகாரிகள். சாட்சி கையெழுத்து போட மட்டும் ஒரே ஒரு தமிழ் அதிகாரி.அவரும் ரகசியமாகவே வரவழைக்கப்பட்டாராம்.மொத்தம் நூறு கேள்விகள் கேட்கப்பட்டதாம். அம்மாவிடம் இருந்து மூன்றுக்குதான் பதில். மகளிடம் இருந்து எழுபது கேள்விகளுக்கு பதில்.விபரமா எழுதி சீல் போட்டு எடுத்துகிட்டு போய் ரொம்ப நாள் ஆச்சு.அடுத்தக்கட்ட ஆக்ஷனுக்குதான் காத்துகிட்டு இருக்கு.ஒரு விஷயம் மட்டும் நல்லா கேட்டுக்கோங்க. 'போகுது... ஈழத் தமிழர்களின் உயிர் போகுது, காப்பாத்துங்கன்னு சனங்க கத்தினது அப்போ பெரியவரு காதுல விழல.இப்போ அவர் கத்துறது டெல்லி காதுல விழல.டெல்லி அம்மா அழற சத்தம் பி.ஜே.பி-கம்யூனிட்டுங்க காதுல விழமாட்டேங்கிறது.இதான் வரலாறு திரும்புதுன்னு சொல்வாங்க போல'' என்று அர்த்த புஷ்டியோடு சிரித்தார் சுவருமுட்டி சுந்தரம். சபை கலைந்தது.
