05 June, 2011

அன்புள்ள ரயினிகாந்த் ...


அன்புள்ள ரயினிகாந்த் ...
நீங்கள் நலமடைய வேண்டும்,
நீங்கள் ஒரு சிறந்த நடிகன் அதுமட்டுமே மனதில் உண்டு, மக்கள் திலகத்தையோ , நமது நடிகர் திலகத்தையோ தொட்டுவிட வில்லை என்பது உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தெரியும், அந்த இடங்களை நீங்கள் இந்த சினிமா முலம் தொட முடியாது என்பதும் உங்களுக்கு தெரியம், அவர்களுக்கு தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் நிலைவேறு அது யாராலும் எட்ட முடியாதவை.

அதுபோல தமிழன் எவரையம் தூக்கி வைத்து கொண்டாடுவான், அது தமிழனாக இருந்தாலும் சரி , வேறு மொழிக்காரர இருந்தாலும் சரி , ஆனால் தமிழருக்கு துரோகமோ , இல்ல தமிழர்கள் மீது சவாரி செய்ய நினைத்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்பதை இந்த தேர்தல் உணர்த்தி இருக்கும் என நாம் நினைக்குறோம், தன்னைத்தானே உலக தமிழ் இனத்தலைவன் என கூறிக்கொண்ட கருணாநிதிக்கு நடந்த நிலை இன்று யாவரும் அறிந்ததே.

ரயினிகாந்த என்ற நடிகனாக பார்க்கும் போது அந்த "முள்ளும் மலரும் , ஆறில் இருந்து அறுபதுவரை", என்பன மட்டுமே என்னை கவர்ந்திருந்தன , இயக்கியவரின் திறனும், உங்கள் நடிப்பும் தமிழ் திறப்படதுரையினை மேலும் மெருகூட்டியது.

பல தடுமாற்றங்கள் ?
ஈழ பிரச்னைக்கு காந்திய வளிதான் சமாதானத்தை கொண்டுவரும் என்று

எங்கள் ரந்தம் செறிந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி புராணக்கதை பேசியது

சில நூல்களை படித்துவிட்டு தெளிவில்லாத நிலைப்பாட்டை ஈழ விடுதலைப் போராட்டதின்மேல் வைத்திருப்பது

வீரப்பன் இறந்தபோது நரகாசூரன் அழிந்தான் என்று அறிக்கை விட்டது,

காவிரி பிரச்சினையில் வாய் திறக்காதது,

ஒகேனக்கலில் தடுமாறியது

உங்கள் சினிமா மூலம் அதி மூட நம்பிக்கைகளை பரப்புவது.
இந்த கசப்பான உங்கள் நடவடிக்கைகள் உங்களை தலைவன் என கூறும் ரசிகர்களுக்கு தெரியாமலோ இல்ல, அவர்கள் அறிவுக்கு எட்டாமலோ இருந்திருக்கலாம் , ஆனால் நம்மை போன்ற சிலரை வெகுவாக பதித்தது உண்டு, நீங்கள் நடிகனாக மட்டும் இருந்திருந்தால் இந்த கேள்விகள் பிறந்திருக்காது.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் இனத்துக்கு மட்டும் என் இந்த நிலை என்பது இன்னும் நமக்கு புரியவில்ல, தமிழர்கள் அவ்வளவு அகிம்சா வாதிலலோ என்று நினைக்க தோன்றுகிறது, நீங்கள் தமிழ் நாட்டிருக்கு வராமல் கர்நாடாகவிலேயே இருந்த்திருந்தால் இந்த இரட்டை நிலைப்பாட்டை எடிதிருக்கவோ, இல்ல இப்படி கன்னடர்களுக்கு எதிராகவோ செயர்ப்பட்டிருக்க முடியுமா? இல்ல இந்தியாவின் வேறு எந்த மாநிலதிலையாவது , வேறு மாநில காரர்கள் அந்த மாநிலத்தில பிழைப்பு நடத்திக்கொண்டு அதேமாநிலத்தவர்களை எதிரிகளாக பார்ப்பது, அவர்களுக்கு எதராக செயற்படுவது இவை முடியுமா? உலகத்தில் இவை எங்காவது நடக்குமா? இல்ல உலகத்தில் ஒரே ஒரு இடத்தில் தான் இப்படி நடக்கும் , நமது தமிழ் நாட்டில் மட்டும் தான், என் எனில் தமிழர்கள் மட்டும் தான் இளிச்ச வாயர்கள் அதனால் தான், ராம் களும் சோ க்களும் நமது சோத்தை தின்னுபுட்டு நமக்கே அரிவாள் தீட்டி கொண்டு இருக்குறதை நினைக்கும் போது? உலகத்திலேயே தமிழன் தான் இளிச்சவாயன், தமிழ் நாடில் தான் யனனாயகம் வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருக்க வேண்டும் என்பதும் நியதி, அப்படி கேள்விகேட்டால் தமிழன் பயங்கரவாதியும், தீவிரவாதியும் ஆக்கப்படுகுறான்,
ஈழப் போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த நீங்கள் கொதிப்படைந்தபோது போது , நாமும் குளிர்ப்படைந்த்தோம் ஆனால் அசித்குமார் பேசியதற்கு அதரவு சொன்னதால் நாங்கள் கொதிப்படைந்தோம், தமிழர்கள் உங்களுக்கு இந்திரன் படம் மூலம் உலக உச்சத்தை தொடும் வாய்ப்பை தந்தார்கள் , ஆனால் நீங்கள் தமிழர்களின் உச்ச மனங்களை தொடவில்லை இன்னும் என்பது உங்களுக்கு தெரியம், அதுதான் நீங்கள் இன்றுவரை நான் நன்றி கடனாக தமிழ் உலகத்திற்கு ஏதாவது செய்ய வேணும் என்று கூறிவருவது காட்டுகிறது,
தற்போது நீங்கள் மிகவும் உடல் நலக் குறைவால் பதிக்க பட்டு இருப்தாக தினமும் தகவல்கள், உங்களுக்காக் உங்கள் சக நடிகர்கள், சினீமா துறை சார்ந்தவர்கள் உங்கள் ரசிகர்கள் , தமிழ் மக்கள் பிரார்த்தனைகள் யாகங்கள் என்று என்ன என்னமோ பண்ணுகிறார்கள் அதைப் பார்த்து நீங்களே நேகுழ்ந்த்துருகி விட்டேன் விரைவில் நலமுடன் திரும்புவேன் என்று கூறி சிங்கபோர் சென்றுள்ளீர்கள். இவ்வரவை முழு தமிழ் உலகமுமே எதிர்பார்த்து காத்திருக்கும்,
தமிழர்களுக்காக எதை செய்ய போகுறீர்கள் ?
ஈழப்ப போராட்டத்தில உலகநாடுகள் கூடி, இந்தியா எல்லா வளங்களையும் அளிக்குடுக்க உங்கள் கண் முன்னாள் பல ஆயிரக்கணக்கான் மக்கள் கொன்று குவிக்க பட்டார்கள், இந்தியாவிற்காக , இந்தியா கொலை செய்கிற ஓர் காரனத்துர்காக உலகம் தனது சுய நல நோக்கதிற்காக வாய்பொத்தி , கைகட்டி வேடிக்கை பார்த்தது , உலக தமிழ் இன தலைவன் என்று தன்னை தானே கூறி கொண்ட கருணாநிதி படுகொலையை கூட்டாக சேர்ந்து தான் இன ம மக்களையே கொன்றுகுவிக்க உதவினான். வல்லமை பொருந்திய உங்களைபோல் மக்கள் பலன்கொண்டவர்களும் சுய நலம் காரணமாக கைகட்டி வேடிக்கை தான் பார்த்தீர்கள், என் இனம் கதறி கதறி துடி துடிக்க படுகொலை செயப்பட்டது.
அதே மக்கள் பலம் கொண்ட உங்களைப்போல் சிலரும் அற்ப சுயநல நோக்கத்திற்காக இந்த படுகொலைக்கு உதவினீர்கள் , அன்று உங்கள் போல் மகள் பலம் படைத்தவர்கள் எலாம் வீதிக்கு இறங்கி போராடியிருந்தால் துரோகி கருணாநிதி இந்த படுகொலைக்கு அதரவளித்திருப்பான? இல்லை உங்கள் இந்திய தேசம் தான் நம் இனம் கதற கதற படுகொலை செய்திருக்குமா? இதன் காரணமாகத்தான் இன்று தமிழ் மாக்களால் துரோகிகளும், எதிரிகளும் துடைத்தேரியப்ட்டிருக்குரார்கள் தமிழ் நாட்டை விட்டு.
உகளுக்கு இவ்வளவு உச்சத்தை தந்த தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு தேவை மட்டும் தான் இருக்குறது, அதுதான் "தமிழ் ஈழ விடுதலை"
தமிழீழ விடுதலைக்கு நீங்கள் உதவலாம் இதுவே நீங்கள் தமிழ் உலகத்துக்கு செய்யும் மிக சிறந்த நன்றிக்கடனாகும் , உன்மையான தமிழ் உணர் வாளர்கள் தமிழ்நாடில் இருக்குறார்கள், அவர்களுடன் சேந்து உங்கள் மக்கள் வலுவும் மிக அதிகமாகி தமிழ் நாடு அரசையும், இந்திய அரசையும் தமிழ் ஈழம் சம்பந்தமாக தெளிவான முடிவை மேற்கொள்ள பண்ணலாம்,முதல் உங்களுக்கு தெளிவான் முடிபு வேணும் ஈழ விடுதலை போராட்டத்தில், அல்லது அதுவும் ஒகேனக்கல் ஆகிவிடுமோ என்ற எண்ணம் நமக்கு வரக்கூடாது . இந்த மகத்தான பணியைவிட தமிழ் உலகத்திரிக்கு உங்களிடம் இருந்து எதுவும் தேவை இல்லை என நாம் நினைக்குறோம் , அதற்காக உங்களை ஆயிதம் ஏந்தி போராடவோ. இல்லை ஈழதுதுக்கு வந்து போராடவோ நாம் கேக்கவில்லை, உங்களுக்கு விரும்பிய அதே அகிம்சை பாதையில் உங்கள் பணியை தொடரலாம், என்று தமிழ்நாடு எழிச்சி பெறுகிறதோ அன்று ஈழம் விடுதலை பெறும்.
தமிழ் ஈழ விடுதலைப் போர் என்றால் அது பயங்கர வாதமாக உலகெங்கும் இந்திய அரசாலும், சிங்கள அரசாலும் சித்தரிக்க படுக்குறது. உலகிலேயே உண்மையான் பயங்கரவாத அரசென்றால் அது இன்றைய சோனியா அரசென்று உலகம் முழுமைக்கும் தெரியும் , இப்படியான மாயையில் இருந்து தெளிவு பெற வேணும் ஒரு விடுதலைப் போர் என்றால் அங்கெ 100 விகிதம் சரியானவைகளையே கடைப்பிடிக்க முடியாது , இது உலக வரலாறு சொல்லும் பாடம்.
தமிழ் ஈழ விடுதலை என்பது உன்மை , நிச்சயம், அது இயற்கையான முடிபு அதை யாரும் தடுக்கவோ, மறுக்கவோ முடியாது, ஆனால் உங்களை போல மக்கள் வலுகொண்டவர்களால் விடுதலையை துரிதப்படுத்த முடியும் என்பதே நமது அவா, இதுவே உங்கள் முன் நிக்கும் தமிழருக்கான மகத்தான் தேவையாகும் , இந்த தேவையை விட உங்கள் மூலம எதுவும் பெரிதாக படாதென நான் நினைக்குறோம், உங்கள் திரைப்பட வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு இப்பணியை கையில் எடுத்தால் உங்கள் பாதங்களுடன் பதினாறு கோடி பாதங்கள் உங்கள் பின்னல் பயணிக்க காதிருன்குன்றன .
இப்பணியை தவற விட்டால்
நீங்களும் பிழைப்பு நடந்திய ஒரு நடிகன் என வரலாறு கூறும்
இப்பணியை தேர்ந்தெடுத்தால்
அன்றுதான் நீயும் தலைவன் என்று தமிழ் உள்ளவரை போற்றும்.
நன்றி
வாழ்க தமிழ்
மீண்டும்
ராவணன்